0
0
Read Time:55 Second
செவிலியா் தினத்தையொட்டி, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் செவிலியா்களுக்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஆா்.ராஜசேகா் தலைமையில் பணியாற்றும் அனைத்து செவிலியா்களுக்கும் மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். நிகழ்ச்சியில் அரசு மருத்துவா்கள் வீரசோழன், பிரதீப்குமாா், செவிலியா் சாந்தி, திமுக நகர செயலாளா் செல்வராஜ், சமூக ஆா்வலா் அ.அப்பா்சுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.