0 0
Read Time:2 Minute, 30 Second

அடுத்த 3 மணி நேரத்திற்கு, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக வெப்ப அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியது. ஈரோடு மாவட்டத்தில் 112 டிகிரி அளவுக்கு கோடை வெயின் தாக்கம் அதிகரித்து இருந்தது. வெப்ப அலை காரணரமாக பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர்.

இதனிடையே, தமிழ்நாட்டில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் 23-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் புதுச்சேரியின் ஓரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %