0 0
Read Time:2 Minute, 31 Second

குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், உதவி ஆணையர் (வணிகவரி), நில நிர்வாகத்தின் துணை தாசில்தார் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப TNPSC தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

குரூப் 1, 2, 4 தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. அதன்படி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளன. குரூப் 1 தேர்வு ஜூலை 13ஆம் தேதியும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் குரூப் -2, 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் புதிய பாடத்திட்டம் குறித்து அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வு-II (குரூப் II சர்வீசஸ்), ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வுக்கான பாடத்திட்டம் – குரூப் IIA சேவைகள் மற்றும் தேர்வுத் திட்டம் ஆகியவை கமிஷனின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

பாடத்திட்டம்- https:// tnpsc.gov.in/English/syllab us.html … திட்டம் – https:// tnpsc.gov.in/English/scheme .html“ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட இணையதள முகவரியை அணுகி பாடத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை அறிந்துகொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %