மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கிய நிலையில், மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். அதன்படி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 157 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 62 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பின்னர் மற்ற கட்சிகள் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஏக் நாத் சின் டே சிவசேனா பிரிவை விட, உத்தவ் தாக்கரே சிவசேனா பிரிவு அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
அதே போல அஜித் பவர் தரப்பு தேசியவாத காங்கிரசை விட, சரத் பாவாரின் தேசியவாத காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக 39 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 17 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் முன்னிலை முன்னிலை வகிக்கிறது.