அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எஸ்பி வேலுமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார், அப்பொழுது அவர் அதிமுக பெரிய கட்சி என்கிறார்கள், ஆனால் தனித்து ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து எப்படி 30 இடங்களில் வெற்றிப்பெற முடியும். கோயம்புத்தூரில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக டெப்பாசிட் இழந்துவிட்டது.
கோயம்புத்தூர் மக்கள் அதிமுகவை முற்றிலுமாக நிராகரித்து விட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக நிர்வாகிகள் கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு பேசுகிறார்கள், கூட்டணியில் இல்லாவிட்டால் ஒரு பேச்சு பேசுகிறார்கள். அவர்களுடைய சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் முழுமையாக நிராகரித்து விட்டதாக அவர் கூறினார்.
மேலும் எஸ்.பி.வேலுமணி போன்ற தலைவர்கள் விரக்தியின் உச்சத்தில் இருந்துக் கொண்டு பேசி வருகிறார்கள். அதனால் அவர்கள் தங்களுடைய அரசியல் அறிவு மற்றும் ஆளுமையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.