தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க சார்பில் சிதம்பரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக ஓய்வு பெற்ற அலுவலர்கள்க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்பு ஒன்றிய அரசு ஓய்வு ஊதியர்களுக்கு இணையாக மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும் நான்கு விழுக்காடு அகழ்விலைப்படி உயர்த்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மற்றும் ஓய்வுரியர்களுக்கு அரசு மருத்துவமனையில் ரூபாய் 5 லட்சம் வரை கட்டணம் இல்லாமல் மருத்துவ சிகிச்சை வழிவகை செய்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன்படி 10 விழுக்காடு கூடுதல் ஓய்வுதியும் வழங்கி ஆணை பிரிமிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் இந்நிகழ்ச்சியில் ஏராளமான அரசு ஓய்வூதிய நிர்வாகிகள் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி