0 0
Read Time:3 Minute, 23 Second

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் அருகிலுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் பிற்பகலில் 4 பேர் உயிரிழந்ததாக முதலில் செய்திகள் வெளியாகின. பின்னர் அடுத்தடுத்து சில மணி நேரங்களிலேயே உயிரிழப்புகள் இருமடங்காக உயர்ந்தது.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். நேற்று காலை வரையில் 29 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், 11 மணி நிலவரப்படி 37 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்து தற்போது வரை 42 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 90 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்டோரிடம் கைது செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் பலரது நிலைமை மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மணிக்கு மணி அதிகரிக்கும் உயிரிழப்புகளால் கள்ளச்சாராய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %