0 0
Read Time:3 Minute, 29 Second

வெறுப்பு அரசியலையும், அவதூறு பேச்சுக்களையும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறுத்திகொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு அடிமையாக இருப்பதாகவும், முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியது உண்மைதான் எனவும் பேசியிருந்தார். மேலும் அரசு மீது கடுமையான விமர்சனங்களையும் அவர் வைத்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலயின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து பேசிய அவர், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் பேரியக்கம், திமுகவுக்கு அடிமையாக இருப்பதாக அண்ணாமலை பேசியுள்ளார். இது போன்ற வெறுப்பு அரசியலை, அவதூறு பேச்சுக்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிருங்கேரி மடத்தின் ரகசியத்தை நாங்கள் வெளியிடுவோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் குறித்த மர்மத்தை வெளியிட வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுள்ளார். வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்தும் அதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் ஏற்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்தும் சட்டப்பேரவையில் முதல்வர் தெளிவாக எடுத்துரைத்து விட்டார். இந்நிலையில், அதுகுறித்து பேசுவது ஏற்புடையதல்ல. மேலும், பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்தும் அப்போது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் வேலை வாய்ப்புகள் குறித்தும் பேச தயாரா?.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இந்தியாவில் உத்தரப் பிரதேசம், குஜராத்தில் தான் கள்ளச் சாராய சாவுகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. அங்கெல்லாம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டதா? இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் குறித்த விசாரணையை சிபிசிஐடி சிறப்பாக மேற்கொண்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %