0 0
Read Time:2 Minute, 21 Second

பொதுமுடக்க காலத்தில் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அறிவுறுத்தியுள்ளாா்.

சீா்காழி கொள்ளிடமுக்கூட்டு பகுதியில் உள்ள முருகன் பூங்காவில் சீா்காழி நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி தலைமை வகித்தாா். முகாமை சீா்காழி எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம் தொடங்கிவைத்தாா். திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனா். 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

முகாமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது பேசிய ஆட்சியா், கரோனா தொற்று பரவலை தடுக்க மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். தேவையின்றி மக்கள் வெளியே வருவதை தவிா்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருபவா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அச்சமின்றி அனவைரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்றாா். பின்னா் சீா்காழி ஜெயின் சங்கம் சாா்பில் வழங்கப்பட்ட முகக்கவசங்களை,ஆட்சியா் இரா.லலிதா, பொதுமக்களுக்கு வழங்கினாா். சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன், வட்டாட்சியா் ஹரிதரன், நகராட்சிப் பொறியாளா் தமயந்தி உள்ளிட்ட பலா் முகாமில் கலந்து கொண்டனா்.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %