சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் மாடு உரிமையாளர்கள் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் முன்னிலை வகித்தார். அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் பங்கேற்று சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை மாட்டின் உரிமையாளர்கள் வீட்டில் கட்டி வைக்க வேண்டும் , தெருவில் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது, உட்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் தொடர்ந்து சாலையில் மாடுகள் தெரிந்தால் கண்டிப்பாக மீண்டும் மாடு உரிமையாளர்களுக்கு அவரது மாடு ஒப்படைக்கப்படாது என கண்டி படம் தெரிவித்தார். இக்கூட்டத்தில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் உரிமையாளர்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி