0 0
Read Time:3 Minute, 42 Second

டாக்டர்கள் நோயாளிகளிடையே நம்பிக்கை மிகவும் அவசியம் என சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், கடவுளுக்கு அடுத்தபடி என்னை காப்பாற்றுங்கள் என்று சொல்லும் அளவிற்கு ஒரே தகுதியுடையவர்கள் டாக்டர்கள் ஆவார்கள் என்றால் மிகையாகாது. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அவதியுருகின்ற நோயாளிகள் தாங்கள் படுகின்ற மனவேதனையை போக்க மருத்துவமனைகளை நோக்கி படையெடுத்து உடனடியாக நிவாரணம் தேடிட முயற்சியெடுக்கின்றார்கள். பணம் படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிறப்பு மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள். வசதியற்ற ஏழை எளியவர்கள் உடனடியாக நாடிச் செல்வது அரசு மருத்துவமனைகளை தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளின் தரம், அதிநவீன சிகிச்சைகள், கட்டிடங்கள் வசதி மேன்மையடைந்து ஆண்டுக்கு ஆண்டு மேம்பட்டு வருவதால் தான் பணக்காரர்கள் கூட அரசு மருத்துவமனைக்கு செல்கின்ற நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களின் பணிச் சுமையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஒரு சில டாக்டர்கள் பணிச்சுமையாலோ ஓய்வின்மையாலோ நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்வது இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெறுகிறது. அப்படிப்பட்டவர்கள் குறித்து சுகாதாரக் துறைத்தனி கவனம் செலுத்தி நோயாளிகளிடம் பண்போடு நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும் மருத்துவர் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப சுகாதாரத் துறை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல நோயாளிகளும் மருத்துவர்களை கசாப்பு கடைக்காரர் போல ஒருபோதும் எண்ணி விடக்கூடாது. நிச்சயமாக எந்த ஒரு மருத்துவரும் நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை கொடுத்து கொன்று விட வேண்டும் என்று துடிப்பது கிடையாது என்பதையும் ஆழமாக உணர வேண்டும். டாக்டர்கள் மற்றும் நோயாளிகளிடம் இடையே ஒருவித பரஸ்பர நம்பிக்கையும் அன்பும் நிலவிட வேண்டிய அவசியமான காலம் இது. சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் அனைவராலும் மறக்கப்பட வேண்டிய ஒன்று. எதிர்காலத்தில் எங்கும் இதுபோன்று நடக்காமல் இருப்பதற்கு டாக்டர்கள் நோயாளிகள் என்னும் இரு தரப்பும் மானசீகமாக சபதமேற்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் தெரிவித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *