0 0
Read Time:2 Minute, 8 Second

தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கவலை தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு இடையே 1995 ஜனவரி 6-ம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கதிஜா மற்றும் ரஹீமா என 2 மகன்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்தார். திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகு, கணவர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

மனைவி சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் எக்ஸ் தள பக்கத்தில் தனது விளக்கத்தை பதிவு செய்தார். தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாகவும், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிவதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது ;

“எங்களுடைய திருமண வாழ்க்கை 30 வயதை எட்டும் என்று நம்பியிருந்தோம். ஆனால் எதிர்பாராத முடிவு வந்துவிட்டது. இறைவனின் சிம்மாசனம்கூட நொறுங்கிய இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இருப்பினும், இந்த நேரத்தில் நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம். வாழ்வின் கடினமான அத்தியாயத்தை கடந்து செல்லும் இவ்வேளையில் எங்களுடைய தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் நண்பர்களுக்கு நன்றி”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %