0 0
Read Time:1 Minute, 40 Second

விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, விஜய்யை சந்தித்த நிலையில், தவெகவில் அவருக்குப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்தும் வகையில், கட்சியின் நிர்வாக வசதிக்காக, 120 கட்சி மாவட்டங்களாகப் பிரித்து, முதற்கட்டமாக 19 கட்சி மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, பனையூரில் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் இரண்டாம் கட்டமாக மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியானது.

சென்னை தெற்கு, கிழக்கு, புறநகர், கோவை தெற்கு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தருமபுரி உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்குப் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகிகள், “இதற்கு முன்பு மக்களுக்கு சேவை ஆற்றியதை விட இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று விஜய் அறிவுறுத்தியதாகத் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *