சிதம்பரம், அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சுவாமி சகஜானந்தா அவர்களின் 135- வது ஆண்டு தோற்றுநர் விழா, பள்ளி ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் ஆசிரியர் சங்கச் செயலாளர் கே.ஏ. சம்பத்குமார் வரவேற்புரை நல்கினார், உதவி தலைமை ஆசிரியர் வெ.ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் த. ஜெயராமன், பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் ஐ.சித்ரா முன்னிலை வகித்தனர், பள்ளியின் தலைமை ஆசிரியை வ. எழிலரசி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் வி. லதா கலந்துகொண்டு சென்ற ஆண்டு பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் நலத்துறையில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு கௌரவிக்கப்பட்டு மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்,பள்ளி துணை ஆய்வாளர் ஆர்.வாழுமுனி, ஆதிதிராவிடர் நலத்துறை உதவி கல்வி அலுவலர் ஜே. கலிவரதன், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவர் பி. முஹம்மது யாசின், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை கி.ஹேமலதா வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ஜி.காந்திமதி, விடுதி காப்பாளினி ஜி.வேல் குமாரி, உடற்கல்வி இயக்குனர் பி.கலா ராணி, ஆசிரியர் விஜயா, அ.அமலா அ.கலையரசி,எம்.பிரதாப்,கே.ஆனந்த லட்சுமி,எம். கனிமொழி, பள்ளியின் முன்னாள் மாணவிகள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர், விழாவை பள்ளியின் தமிழாசிரியர் எம். மணிகண்டன் தொகுத்து வழங்கினார், ஆசிரியர் சங்க துணைச் செயலாளர் எம்.தட்சிணாமூர்த்தி நன்றியுரை கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி