0 0
Read Time:3 Minute, 39 Second

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணியை தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியுள்ளது. முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தாபா, என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியை தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி உள்ளது. தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி தலைவர் முஸ்தாபா தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து கூட்டணி பேச்சுவார்ததையை தொடங்கி உள்ளனர்.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தவெக கட்சி அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கு 14 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் கட்சி தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்ப்பட்டு வந்த நிலையில் அந்த கட்சியில் இனணந்த நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜூனாவிற்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பதவியும், நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பும், பி.ஜெகதீஷுக்கு தலைமைக் கழக இணைப் பொருளாளர் பொறுப்பும் வழங்கப்படுவதாக விஜய் அறிவித்தார்.

இதனிடையே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மத்திய உள்துறை அமைச்சகம் ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியதை அரசியல் ரீதியாக விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவின. விஜய்யை தன்பக்கம் ஈர்க்கவே பாஜக அரசு இதுப்போன்று செயல்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் யாருடன் கூட்டணி வைப்பார் என்று பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தவெக தொடங்கி உள்ளது. தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி தலைவர் முஸ்தாபா தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து கூட்டணி பேச்சுவார்ததையை தொடங்கி உள்ளனர். 2026 சட்டப்பேரைவை தேர்தலுக்கான கட்சி பணிகளை தீவிரப்படுத்தி உள்ள தவெக இன்னும் சில கட்சிகள் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *