யூடியூபர் – சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை நடத்த அனுமதி வழங்கி உள்ள உச்சநீதிமன்றம், வழக்குகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்க கூடாது என்றும் சவுக்கு சங்கருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவவிட்டுள்ளது.
‘சவுக்கு மீடியா’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் சவுக்கு சங்கர் தமிழ்நாடு அரசு, நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், பெண் காவலர்கள் உள்ளிட்டவர்களை தொடர்ந்து விமர்சித்தும், தாக்குறைவாகவும் பேசி வருவதால் அவர் மீது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் தொடரப்பட்டுளன. தன்மீது போடபட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரையும் தரக்குறைவாக பேசி வருவதாகவும் கடந்த முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது எந்த வீடியோவும் இனி பதிவிட கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அதனை மீறி தொடர்ந்து விமர்சித்து வருவதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு முறையும் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போதும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் சவுக்கு சங்கர், அதை அவர் கடைப்பிடிக்காமல் தொடர்ந்து தவறு செய்து வருகிறார் என்றும் நீதிபதிகளிடம் சுட்டிக்காட்டினார் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா.
கடந்த முறை நீதிமன்ற அவமதிப்பு வழ்க்கு விசாரணையின் போது எந்த வீடியோவும் பதிவிடக்கூடாது என உத்தரவிட்டும் அதனை மீறியுள்ளார். எனவே அவர் கருத்துக்களை வெளியிட தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வழக்கு தொடர்பாகவோ, விசாரணை தொடர்பாகவோ சவுக்கு சங்கர் கருத்து தெரிவிக்கவும், பேசவும் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள். இந்த விவகாரம் குறித்த antecedent நன்கு அறிவோம். இவர் அதே நபர் தானே என தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.
உங்கள் client- க்கு அறிவுரை கூறுங்கள் என்று சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசனிடம் அறிவுறுத்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, சவுக்கு சங்கர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெறும். விதிகள் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யலாம்.சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்ய முடியாது.
திருச்சியில் பதிவாகியுள்ள FIR தவிர மற்ற அனைத்து வழக்குகளையும் இணைத்து கோவை குற்றப்பிரிவில் விசாரிக்க உத்தரவு. நீதிமன்ற உத்தரவை மீறியிருக்கும் பட்சத்தில், அந்த விவகாரத்தில் கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்து உத்தரவு பெற்றுக் கொள்ளுங்கள். ஏற்கனவே தடுப்பு காவல் வழக்கில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மனுதாரர் சவுக்கு சங்கர் மீறினால், நீதிமன்றம் முன் அரசு தரப்பு கொண்டு வரலாம் என தெரிவித்து, அனைத்து வழக்குகளிலும் புலன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் விசாரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கவும் ஊடகங்களில் வீடியோக்களை பதிவிடவும் சவுக்கு சங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்குகள் தொடர்பான கருத்துக்களை சவுக்கு சங்கர் தெரிவிக்க கூடாது என்று உத்தரவிட்டதோடு, ஏற்கனவே தடுப்பு காவல் வழக்கில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மனுதாரர் சவுக்கு சங்கர் மீறினால் அதனை உடனடியாக நீதிமன்றத்தின் முன்பு தமிழ்நாடு அரசு தரப்பு கொண்டு வரலாம் எனவும் கூறினார்கள்.