Read Time:1 Minute, 1 Second
வழக்கறிஞர்கள் சட்டத் திருத்த மசோதா -2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சி. முட்லூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து சிதம்பரம் வழக்கறிஞர் சங்க பொருளாளர் வழக்கறிஞர் T. அமுதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வழக்கறிஞர் சங்கத் தலைவர் P. T. ஜானகி, எஸ். செந்தில், தயாநிதி, எஸ். மணிவண்ணன், பாலகுரு உமா சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வழக்கறிஞர் சங்க செயலாளர் மணிகண்டன் நன்றி உரையாற்றினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி