அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை நிறைவேற்ற பொறியியல் கல்லூரி வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேராசிரியர் முத்து வேலாயுதம் தலைமை தாங்கினார் ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் பேராசிரியர் அசோகன் இமயவர்மன் செல்வராஜ் செல்ல பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்திற்கு 400க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகை மற்றும் பி எச் டி முனைவர் பட்டம் ஊக்கத்துகளை உடனடியாக வழங்கிட வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அய்ற்பணியிடம் ஆசிரியர்களை ஆங்காங்கே உள்ளடுப்பு செய்தல் மற்றும் பல்கலைக்கழகத் துறையில் உள்ள காலி பணியிடங்களை ஆசிரியர்களை திரும்ப அழைக்க கோரியும் காலமுறை பதவி உயர்வுகளை வழங்க கோரியும் ஆசிரியர்களுக்கு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி