சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் அப்துல் ரியாஸ் செயலாளர். ராதாகிருஷ்ணன் பொருளாளர் ராம வீரப்பன் நிர்வாகிகள் சிதம்பரம் நகராட்சி ஆணையாளிடம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்
தற்போதுள்ள சொத்து வரியை பாதியாக குறைக்க வேண்டும்.
பாதாள சாக்கடை டெபாசிட்டுகளை அறவே ரத்து செய்ய வேண்டும்
டி என் ஓ (D&O) டிரேட் லைசென்ஸ் பிப்ரவரிக்கு உள்ளாக கட்ட வேண்டிய தொகையை நகராட்சி நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாக விடுவித்து எப்பொழுதும் போல் உள்ள கட்டணத்தை அதற்கு பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆண்டுதோறும் 5 சதவீத வரி உயர்வு என்பதை திரும்ப பெற வேண்டுகிறோம்
நான்கு வீதிகளில் போடப்படும் பிளாட்பார்ம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுகிறோம்
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிதாக விதிக்கப்பட்டிருக்கும் வரிகளை உடனே திரும்பப் பெற வேண்டுகிறோம். கூட்டுக் குடிநீர் திட்டத்தை உடனே செயல்படுத்தி நான்கு வீதி தெருக்களில் போடப்பட வேண்டிய சாலை பணிகளை தேர்தலுக்குள்ளாக துரிதப்படுத்த வேண்டுகிறோம்.
ரோட்டுக்கு வெளியே கடைகளை அடைத்தும் போக்குவரத்துகளுக்கு இடைஞ்சல் தெரிவிக்கும் விதமாக கடைகளை போட்டுள்ளோர்க்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக மாற்றிடங்கள் வழங்கிடவும் அவர்கள் ஒலிபெருக்கி மூலம் அதிக சத்தத்துடன் போக்குவரத்துக்கும் பாதசாரிகளுக்கும் இடைஞ்சல் செய்யும் போக்கை அறவே தடுத்து நிறுத்த வேண்டுகிறோம்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி