கடலூர் மாவட்டம்குறிஞ்சிப்பாடி கடைவீதியில் மளிகை கடை காய்கறி கடை பெட்டி கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைவீதிக்கு குறிஞ்சிப்பாடி சுற்றுப்பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பொருள் வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது இந்த நிலையில் ஜன நடமாட்டம் அதிகம் உள்ள நேரங்களிலும் அதிக போக்குவரத்து உள்ள நேரத்திலும் கடைவீதி பகுதிகளில் சரக்கு இறக்கும் லாரிகள் சரக்கு ஏற்றும் லாரிகள் மினி லோடு வேன் டாட்டா ஏசி உள்ளிட்ட வாகனங்களை கடைவீதிகளில் ஆங்காங்கே கடை முன்பும் தெருக்களிலும் நிறுத்தி வைப்பதால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் பொதுமக்கள் அவதி பட வேண்டியுள்ளது.
இதனால் காவல்துறையினர் கடைவீதிகளில் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வழிவகை செய்ய வேண்டுமென வியாபாரிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் தற்பொழுது கொரோனோ தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவதால் அதிக அளவில் பொதுமக்கள் கடை வீதிக்கு வந்து செல்வதாலும் அப்போது லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்படுவதால் காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றனர்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.