0 0
Read Time:1 Minute, 42 Second

கரோனா ஊரடங்கு அமலில் உள்ளநிலையில், உரிய அனுமதியுடன் திருமணம், இறப்பு உள்ளிட்டவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார்பேருந்துகளின் சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன.

இருப்பினும், திருமணம், இறப்பு, மருத்துவப் பணிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு உரிய அனுமதியுடன் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நூற்றுக்கணக்கான பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கிவருகிறோம். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.40 என்ற கட்டண அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது ஊருக்கு ஏற்றார்போல், இடத்துக்கு ஏற்றார்போல் மாறும்.

பேருந்துகள் தேவைப்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 9445030523, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், 9445014416, விழுப்புரம் – 9445021206, கோவை – 9442268635, கும்பகோணம் – 9487995529

ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %