Read Time:1 Minute, 1 Second
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டார் திமுக சட்ட மன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் அம்மா உணவகத்தில் தரமான உணவு, சுத்தம், சுவை, நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் பின்பற்ற படுகிறதா என ஆய்வு செய்தார். பின்பு உணவகத்தில் வழங்கப்படும் உணவில் சுவை எப்படி உள்ளது என சுவைத்து பார்த்து அறிந்துகொண்டார். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர், மேற்பார்வையாளர்
சுகாதார ஆய்வாளர் வருவாய் உதவியாளர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் அம்மா உணவக ஊழியர்கள் உடனிருந்தனர்.
நிருபர்: மன்னை விஜயகாந்த், காட்டுமன்னார்கோயில்.