0 0
Read Time:1 Minute, 54 Second

கொரோனா அச்சம் காரணமாக, ரயில்களில் பயணிகளின் வருகை தற்போது குறைந்து காணப்படுகிறது.இதனையடுத்து சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான ரயில்களின் பயண சேவை கடந்த சில வாரங்களுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டுவிட்டது.

அவற்றின் வரிசையில் தற்போது மேலும் இரண்டு தினசரி ரயில்களின் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சிருக்கு நாள்தோறும் இயக்கப்பட்டுவரும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் மே 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.எதிர் திசையில் திருச்சியில் இருந்து சென்ன எழும்பூருக்கு இயக்கப்படும் இந்த விரைவு ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோன்று, சென்னை எழும்பூரில் இருந்து மன்னார்குடிக்கு நாள்தோறும் இரவு 10 மணிக்கு இயக்கப்படும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலும் நாளை முதல் (மே 18) ஜூன் 1 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %