0 0
Read Time:2 Minute, 46 Second

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. 
எனவே மதுபிரியர்கள்      மது கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இதை பயன்படுத்தி, போலி மதுபானங்களை தயார் செய்து விற்பனை செய்யும் பணியில் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் ஒரு கும்பல் இறங்கி இருப்பதாக குள்ளஞ்சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 


அதன்பேரில், குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய் கீர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ராமநாதன்குப்பத்தில் உள்ள நீலகண்டன் என்பவரது மகன் உத்திராபதி (வயது 33) என்பவர் வீட்டில் சானிடைசரை பயன்படுத்தி போலி மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருவது தெரியவந்தது.
 இதையடுத்து போலீசார் அதிரடியாக அவரது வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில், சுமார் 400 லிட்டர் சானிடைசர், 2500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள், போலி ஸ்டிக்கர்கள், மது தயாரிக்கும் உதிரி பாகங்கள் உள்ளிட்டவை இருந்தன. அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


இது தொடர்பாக உத்திராபதி மற்றும் அங்கு மதுபானம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வீடுர் கிராமத்தை சேர்ந்த வரதன் மகன் வடமலை (38), வடக்குத்து அடுத்த பெரிய கோவிலன்குப்பம் முத்துகிருஷ்ணன் மகன் ராமலிங்கம் (65), குள்ளஞ்சாவடி அடுத்த தாதாகுப்பம்  சரவணன் மகன் மணிகண்டன் (24), அதே பகுதியை சேர்ந்த முத்தான் மகன் தண்டபாணி (32), ராமநாதகுப்பம்  கந்தப்பன் மகன் ரகுபதி (46), ராஜேஷ்குமார், புதுச்சேரி ஸ்ரீதர், முள்ளோடை அன்பு ஆகியோரையும் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %