0 0
Read Time:3 Minute, 10 Second

“மிக மோசமாக கொரோனாவை கையாண்டவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம்” -‘The Conversation’ News.

கொரோனா தொற்றை மிக மோசமாகக் கையாண்ட தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம் அளித்துள்ளது ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச செய்தித் தளமான ‘தி கான்வெர்சேஷன்’.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக 4 லட்சத்துக்கும் அதிகமானோர் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்போர் எண்ணிக்கை 4,500-ஐ கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச செய்தித் தளமான ‘தி கான்வெர்சேஷன்’ கொரோனாவை மிக மோசமாகக் கையாண்ட தலைவர்கள் எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முதலிடத்தில் வைத்துள்ளது.

அந்தக் கட்டுரையில், “ஒரு நாளைக்கு சுமார் 4 லட்சம் புதிய கொரோனா தொற்று பாதிப்பை பதிவு செய்து உலகளாவிய அளவில் தொற்றுநோயின் மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் இன்றியும், உயிர் காக்கும் மருந்துகள் இன்றியும் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

2021 ஜனவரியில், பிரதமர் மோடி இந்தியா கொரோனாவை திறம்படக் கையாண்டு மனிதகுலத்தை காப்பாற்றியதாக அறிவித்தார். மார்ச் மாதத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனாவின் எண்ட்கேமை அடைந்துவிட்டதாகப் பெருமையுடன் கூறினார்.

ஆனால், இன்று நாள்தோறும் ஆயிரக்கணக்கானோரை பலியாக்கி வருகிறது கொரோனா. கொரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்க மோடி அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மத விழாவையும் அனுமதித்து மிகப்பெரும் பரவலுக்குக் காரணமானது மோடி அரசு.” எனக் கடுமையாகச் சாடியுள்ளது.

மேலும், ‘தி கான்வெர்சேஷன்’ செய்தித் தளம் ட்விட்டரில் நடத்திய ‘கொரோனாவை மிக மோசமாகக் கையாண்ட பிரதமர்கள் யார்?’ என்ற கருத்துக்கணிப்பில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இந்திய பிரதமர் மோடியைக் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %