0 0
Read Time:2 Minute, 6 Second

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.இந்த பேராலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்’ என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘பசிலிக்கா’ என்ற அந்தஸ்து பெற்றுள்ளது. இந்த பேராலயம் எதிரே வங்ககடல் அமைந்திப்பது மேலும் சிறப்பு. ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் வேளாங்கண்ணிக்கு பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா அலை 2-வது  மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கோவில் திருவிழாக்கள், மத சடங்குகள் நடத்த கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேளாங்கண்ணி மாதா பேராலயமும் மூடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பவுர்ணமி, அமாவாசை நாட்களில் கடல் சீற்றமாக காணப்படும். இதனால் வேளாங்கண்ணி கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்பட்டு தடுப்புச்சுவர் அமைத்தது போல் காணப்படுகிறது. எப்போதும் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.. அப்போது அவர்களின் காலடிப்பட்டு கடற்கரை தரை மட்டாக காணப்படும். தற்போது சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வராததால் மணல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையில் தடுப்புச்சுவர் அமைத்தது போல் காணப்படுகிறது.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %