சிதம்பரம்: பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி உட்பட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் கலந்து கொண்டு பேசுகையில்
“சிதம்பரம் பகுதியில் அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாக சென்று கிருமிநாசினி தெளிக்க வேண்டும் அரசு அறிவித்தபடி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை கடைகள் காய்கறி கடைகள் தெரிந்திருக்க வேண்டும் அதற்கு மேல் இருக்கும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்”
என்று கூறினார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி வட்டார மருத்துவ அலுவலர் அமுதா பெருமாள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி ராதிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பாலாஜி, சிதம்பரம்.