மயிலாடுதுறையில் எரிவாயு தகன மேடையில் பணியாற்றும் ஊழியா்களின் பாதுகாப்புக்காக அவா்களுக்கு கவசஉடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பாஜக சாா்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழப்பவா்களின் சடலங்கள், மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் பகுதியில் உள்ள எரிவாயு தகன மேடையில் எரியூட்டப்படுகின்றன. இங்கு, பணியாற்றும் ஊழியா்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணியாற்றுகின்றனா். இதையறிந்த பாஜக நகர தலைவரும், தூய்மை இந்தியா திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான மோடி.கண்ணன் மற்றும் அக்கட்சியினா், தகனமேடை ஊழியா்களுக்கு பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசங்கள், சானிடைசா் ஆகியவற்றை வழங்கினா். அத்துடன், அவா்களின் பணியை பாராட்டும் விதமாக, பழங்கள், முட்டை ஆகியவற்றை வழங்கினா்.
இதில், பாஜக மாவட்ட துணைத் தலைவா் முட்டம் செந்தில்குமாா், மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளா் குருசங்கா், நகர பொதுச் செயலாளா் சதீஸ்சிங் ஆகியோா் பங்கேற்றனா்.
நிருபர்: யுவராஜ், மயிலை.