1 0
Read Time:1 Minute, 51 Second

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சியில் வெள்ளமணல் மீனவ கிராமம் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த கிராமத்துக்கு செல்ல இதுவரை சாலை வசதி இல்லை.

150 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வரும் இந்த கிராமத்துக்கு வனத்துறைக்கு சொந்தமான இடம் வழியாக தான் செல்ல வேண்டும். இந்த கிராமத்துக்கு சாலை அமைக்க கோரி கிராம மக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சாலை அமைக்கவில்லை. இந்தநிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் நேற்று வெள்ளமணல் கிராமத்துக்கு நேரில் சென்று சாலை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் இதுகுறித்து சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கூறுகையில், வெள்ளமணல் கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையான சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லசேது ரவிக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %