0 0
Read Time:2 Minute, 17 Second

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 ஆயிரம் பேரில் சுமார் ஆயிரம் பேர் கடலூர் நகர பகுதியைச் சேர்ந்தவர்கள்.


இந்நிலையில் கடலூர் நகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் நேற்று, கடலூர் நகராட்சி அலுவலகத்தில் பல்வேறுத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். 
மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக, மருத்துவ பயிற்சி முடித்த 60 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் கடலூர் முதுநகரில் உள்ள ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்ததில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்தாலோசித்தார்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %