0 0
Read Time:2 Minute, 20 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் 500 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளர் சென்று கொரோனா தொற்று கண்டறியும் சோதனையில் ஈடுபடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரண்டு நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 147 துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் 1172 தன்னார்வ குழு உறுப்பினர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் ஊட்டச்சத்து பணியாளர்களை கொண்டு வீடு வீடாக சென்று கொரோனா சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

500 வீடுகளுக்குஒரு களப்பணியாளர் வீதம் நியமிக்கப்பட்டு சோதனைக் கருவிகள் மூலம் நோய்த் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு கொரோனா வகைப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் ஆறு இடங்களில் வகைப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவர்களில் வீட்டிலிருந்து தனிமைப்படுத்தப்படபவர்கள், கொரோனா கவனிப்பு மையத்திற்கு அனுப்பப்படுபவர்கள், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் என்று மூன்று வகையாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படும். வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகள் உதவிகள் வழங்கப்படும். 04364 222588, 9342056967, 9342063580 ஆகிய கட்டுப்பாட்டு நிலையங்களின் தொலைபேசி எண்கள் மூலம் பொதுமக்கள் இது குறித்த தங்கள் சந்தேகங்களை கேட்டு ஆலோசனை பெறலாம் என்று கூறினார்.

நிருபர்: யுவராஜ், மயிலை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %