வீடுகளுக்கு காய்கறிகள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா கூறினாா்.
சீா்காழி அருகேயுள்ள பழையாறு மீனவ கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று கள ஆய்வு செய்தாா் எஸ்.பி. அங்கு ஒன்றியக் குழு தலைவா் ஜெயபிரகாஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம மக்கள், இளைஞா்களை சந்தித்து கரோனா பரவலை தடுக்க செயல்படுத்தப்படும் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா், பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு கடைகளுக்கு சென்று கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் அவா்களுக்கு தேவைப்படும் காய்கனிகள் மற்றும் மளிகை பொருள்களை வாகனங்கள் மூலம் வீடு வீடாக சென்று கொடுக்க அறிவுரை வழங்கி, அந்த வாகனப் போக்குவரத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் ஊராட்சி பிரதிநிதிகள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, சாலையோரங்களில் கூட்டமாக விளையாடிக் கொண்டிருநத சிறுவா்களை அழைத்து கரோனா விழிப்புணா்வு அறிவுரை வழங்கி கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், பொது வெளியில் சுற்றித் திரிவதை தவிா்க்க வேண்டும் என்றாா்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.