0 0
Read Time:1 Minute, 57 Second

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு ரோவர் கிராப்ட் கப்பல் வந்துள்ளது. இந்த கப்பல் நீரிலும், நிலத்திலும் செல்லும். 

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. வேதாரண்யம் வழியாக இலங்கைக்கு கஞ்சா, மஞ்சள் மூட்டைகள் கடத்தப்படுவதை தடுக்கவும், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர காவல் படை சார்பில் தீவிர ரோந்து பணி நடைபெற்று வருகிறது. 

சுங்க இலாகா, கடலோர காவல் குழும போலீசார் என பல்வேறு துறையினர் கடலிலும் தரை மார்க்கமாகவும் கண்காணித்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  மேலும் இந்திய கப்பல் படை சார்பில் தரையிலும் நீரிலும் செல்லக்கூடிய ரோவர் கிராப்ட் கப்பல் பாக் ஜலசந்தி வங்காள விரிகுடாக் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ஓய்வுக்காக இந்த ரோவர் கிராப்ட் கப்பல்  கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள வீரர்கள் விமானப் படை முகாமில் தங்கி ஓய்வெடுத்து மீண்டும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது. 

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %