0 0
Read Time:2 Minute, 19 Second

மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

விடிய விடிய ராஜகோபாலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர் ராஜகோபாலை காவல்துறையினர் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று ஆஜர் படுத்த உள்ளனர் ராஜகோபாலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்க அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, தனியார் பள்ளி தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் கீதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம், அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை பள்ளிக்கல்வி ஆணையருக்கு முதன்மை கல்வி அலுவலர் அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து கல்வி ஆணையர், தமிழக அரசிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித்ததாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக, ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %