0
0
Read Time:1 Minute, 3 Second
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை நாய்கள் வாயிலாக கண்டுபிடிக்க முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
லண்டனில் இது குறித்து பேசிய ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் லோகன், ஒருவரின் உடம்பில் இருந்து வெளிப்படும் வாசனை வாயிலாக, அவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை நாய்கள் கண்டுபிடித்து விடுகின்றன என்பது ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்றார்.இதற்காக மருத்துவ கண்டுபிடிப்பு நாய்கள் பிரிவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள், நாய்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உடை, முக கவசம், சாக்ஸ் உள்ளிட்டவற்றை கொடுத்து, மோப்ப சக்தியை உணரச் செய்தனர் என்றார்.