0 0
Read Time:3 Minute, 19 Second

தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடு இல்லை. எனவே தமிழக அரசு வருகிற 31-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டது. அதன்படி நேற்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதன் காரணமாக பஸ், ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. . இதனால் பஸ்நிலையம் முக்கிய சாலைகள் வெறிச்சோடி இருந்தன.
மயிலாடுதுறை நகரை பொறுத்த வரையில் காந்திஜி சாலை காமராஜர் சாலை பட்டமங்கல தெரு திருவாரூர் சாலை கச்சேரி சாலை மற்றும் அனைத்து பகுதிகளிலும் மருந்து பால் முக்கிய அத்தியவசிய கடைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அனைத்து முக்கிய சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகரின் கடைவீதியும் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் தனியார் அலுவலகங்களும், பெரும்பாலான அரசு அலுவலகங்களும் மூடப்பட்டு இருந்தது. முக்கிய அரசு அலுவலகங்கள் மட்டுமே செயல்பட்டன.
வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்குகள், அம்மா உணவகம், வங்கிகள் மட்டுமே திறந்து இருந்தன. இவற்றில் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தன. முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கினர்.
நகர் முழுவதும் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களிடம் விசாரித்து தகுந்த ஆதாரங்கள் இருந்தாள் அனுப்பி வைத்தனர். தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த நபர்களின் இருசக்கர வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்தனர்.

இதேபோல் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

நிருபர்: ஜமால், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %