சென்னை: செங்கல்பட்டில் 9 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
கொரோனவை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் தொடங்கியுள்ளது. தடுப்பூசிகளை நேரடியாக வெளிநாடுகளில் இருந்து பெற உலகளாவிய டெண்டர்களை தமிழக அரசு கோரியுள்ளது.
ஸ்டாலின் ஆய்வு தமிழத்துக்கு தேவையான தடுப்பூசிகள், ஆக்சிஜனை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருமணி கிராமத்தில் உள்ள எச்.எல்.எல்.பயோடெக்கின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
9 ஆண்டுகளாக செயல்படவில்லை இந்த தடுப்பூசி பூங்கா சுமார் ரூ. 600 கோடி செலவில் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை செயல்படாமல் முடங்கியுள்ளது. இங்கு 585 மில்லியன் டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்ய வேண்டும்.செயல்படாமல் இருக்கும் இந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
இங்கு தடுப்பூசியை உறபத்தியை மீண்டும் தொடங்கலாமா? எத்தனை தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும்? இதற்கான பணிகள் தொடங்குவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் விரைவில் தடுப்பூசி உற்பத்தி பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.