0
0
Read Time:1 Minute, 16 Second
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவிலில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக வரித் துறை சாா்பில், நடமாடும் காய்கறி வாகனத்தை சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பொதுமுடக்கத்தையொட்டி, பொதுமக்களுக்கு வீடுகளுக்கே சென்று காய்கறி விற்பனை செய்யும் வகையில், இத்திட்டம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா், செம்பனாா்கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொறுப்பு) குமரன், வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலை கண்ணன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் ஞானவேலன், ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளா் பி.எம். ஸ்ரீதா், ஊராட்சித் தலைவா் விசுவநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.