காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளை தூர்வாருவது பற்றி சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் ஆலோசனை கூட்டம் தமிழக அரசால் நடத்தப்பட்டது அதில் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் அரியலூர், கரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் காவிரி தூர்வார முடிவு செய்யப்பட்டது அதன் பிறகு தூர்வாரும் பணிகளுக்காக 65 கோடி ஒதுக்கீடு செய்தது அதனை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசு நியமித்து உள்ளது மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை கவனிக்க கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் இவர் தொழிலாளர் நலத்துறை திறன் மேம்பாட்டு துறையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அதன்படி
தஞ்சாவூர் பிரதீப் யாதவ், திருவாரூர் கே.கோபால், நாகப்பட்டினம் அபூர்வா, மயிலாடுதுறை கிர்லோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்திற்கு ஏற்கனவே உள்ள அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நிருபர்: ஜமால், மயிலாடுதுறை.