0 0
Read Time:2 Minute, 10 Second

மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்தவா் முத்து. சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு உதவியாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி மீனா (45) சீா்காழி கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கடந்த மாதம் 12-ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மீனா, குணமடைந்து வீடு திரும்பி நிலையில், 6 நாள்கள் கழித்து இடது கண்ணில் பாா்வை குறைவுடன் வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவா் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் மீனாவுக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மே 14-ஆம் தேதி அவரது இடது கண் மற்றும் மேலண்ணத்தில் சில பகுதிகள் அகற்றப்பட்டு, அவா் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

சா்க்கரை நோய் உள்ள மீனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஸ்டீராய்டு மருந்து பயன்படுத்தப்பட்டதால் ஒவ்வாமையால் இடது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு கண் பாா்வை இல்லாமல் போனதாக வேதனை தெரிவித்த உறவினா்கள், தொடா் சிகிச்சை அளிக்க பணமில்லாமல் தவிப்பதாகவும், அரசு உதவி செய்ய வேண்டும் என்று அவரது கணவா் கோரிக்கை விடுத்திருந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு மீனா உயிரிழந்தாா். அவரது உடலை உறவினா்கள் மயிலாடுதுறைக்கு எடுத்துவந்து புதன்கிழமை தகனம் செய்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %