0 0
Read Time:1 Minute, 51 Second

காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் காட்டுமன்னார்கோவில் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஒரு புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.  அப்போது அங்கிருந்த மின்கம்பங்களும் சேதமானது. 

இதபற்றி அறிந்த மின்சார வாரிய துறை பொறுப்பு உதவி இயக்குனர் குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையில் மின்சார வாரிய ணியாளர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள்  விரைந்து சென்று மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  மேலும் அங்கு சேதமான மின்கம்பமும் சரிசெய்யப்பட்டது.

இதபோல் குமராட்சி அருகே உருத்தர சோலை கிராமத்தில் விவசாயிகள் பயிர் செய்திருந்த வாழை மரங்களில், சுமார் 25 ஏக்கர் வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து சேதமடைந்தது. 
 ஏற்கனவே கொரோனாவால் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவது குறைந்து வாழைகள் விற்பனையும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இருந்த வாழை மரங்களம் சூறைக்காற்றுக்கு முறிந்து சேதமாகி இருப்பது விவசாயிகளை மேலும் கவலையடைய செய்துள்ளது.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %