மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் பொது மக்களை தடுப்பூசி எடுத்துக்க கொள்ள கவரும் விதமாக குலை வாழை மரம் , தோரணம் கட்டி, சிவப்புக் கம்பளம் விரித்து கண்கவரும் வகையில் வண்ண மயமான தடுப்பூசி திருவிழாவினை செயல் அலுவலர் கு.குகன் ஏற்பாடு செய்திருந்தார்.
முகாமில் பிரமாண்டமான கொரோனா வைரஸ் கிருமி உருவம், ராட்சச ஊசி மற்றும் பெரிய தடுப்பூசி மருந்துக் குப்பி பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தது. வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் பொது சுகாத்தாரத்துறையுடன் இணைந்து 18 வயது முதல் 45 வயது வரையிலான பொதுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசிமுகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.ராஜமோகன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவர் விஷ்ணுகாரத்திக் , சுகாதார மேற்பார்வையாளர் த. இராஜாராமன் செவிலியர்கள் அருள்ஜோதி , சாரதா ஆகியோர் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். சீர்காழி வருவாய் கோட்ட அலுவலர் நாராயணன் உடனிருந்தார்.
விழாவில் திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மகா அலெக்ஸ்சாண்டர், நகர செயலாளர் அன்புச்செழியன், மாவட்ட பிரதிநிதி இரா.கமலநாதன், நகர அவைத்தலைவலர் வி. சுந்தரமூர்த்தி , மாவட்ட பிரதி நிதி எஸ்.சாமிநாதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். வர்த்தக சங்க செயலாளர் ஜி.வி.என்.கண்ணன் நன்றி கூறினார்.