0 0
Read Time:2 Minute, 46 Second

சிதம்பரம்: அண்ணாமலைநகர் மின் மயானத்தை சீரமைக்க தமாகா சார்பில் கோரிக்கை!

சிதம்பரம், மே 26: சிதம்பரம் அண்ணாமலைநகரில் அமைக்கப்பட்ட மின்மயானம் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் நகர தமாகா தலைவர் தில்லை ஆர்.மக்கீன் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

சிதம்பரம் வட்டம் அண்ணாமலை நகர் பேரூராட்சி கட்டுப்பாட்டில் பொது நவீன எரிவாயு தகன மேடை கடந்த சில வருடங்களுக்கு முன் சுமார் ஒன்றரை கோடி செலவில் பேரூராட்சி நிர்வாகத்தால் பொதுமக்கள் நலன் கருதி கட்டி திறக்கப்பட்டது. அதன் பிறகு அந்த நவீன எரிவாயு தகன மேடை ஆறு மாதங்கள் மட்டுமே இயங்கியது. பின்னர் பழுதடைந்து இயங்காமல் இருந்தது. அதன் பிறகு அதை குறைந்த செலவில் புணரமைப்பு செய்து தன்னார்வ தொண்டு நிறுவன திருவக்குளம் மக்கள் சமுதாய நல சங்கத்திடம் மூன்று வருடங்களுக்கு அதை நடத்திட குத்தகை விடப்பட்டது. குத்தகை எடுத்து எட்டு மாதங்கள் மட்டுமே நவீன எரிவாயு தகன மேடை செயல் பட்டது. பின்னர் மின்மயானம் இயங்கவில்லை. கரோனா தொற்று வந்த சமயம் அதன் பிறகு அந்த நவீன எரிவாயு தகன மேடை செயல் படவில்லை. இதுகுறித்து அண்ணாமலைநகர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. தற்சமயம் இரண்டாவது அலை கொரோனா வைரஸ் தோற்றால் அதிக சடலங்கள் வர துவங்கி உள்ளதால் புதைக்கும் இடங்களில் வெளியில் பிணங்கள் எரிக்க படுவதால் விறகு மற்றும் இதர பொருட்கள் வாங்க சுமார் 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை வாங்கப்படுகிறது. எனவே அண்ணாமலைநகர் நவீன எரிவாயு மற்றும் மின் தகன மேடையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கடிதத்தில் தில்லை ஆர்.மக்கீன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்:பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %