0 0
Read Time:2 Minute, 23 Second

மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளதாவது,

ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது. கொரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடித்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

கொரோனாவால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அதற்காக மாதம் 2 ஆயிரம் வீதம் இரு மாதங்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படுகிறது.

ஆனால் இதனை இப்படி நீட்டித்துக்கொண்டிருக்க முடியாது. மக்களை காக்கும் மகத்தான பணியில் என்னை நான் ஒப்படைத்துள்ளேன்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையே தேவை. தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக செயல்படும் என்று தெரிவித்தார்.

ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ளது கொரோனாவை ஒழிப்போம்- நமக்கான வளம் மிகுந்த தமிழகத்தை அமைப்போம்

ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது மக்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் கொரோனா பரவலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்

ஊரடங்கால் குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். 2ஆவது தவணையாக ரூ 2000 நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும்.

Full Video:

https://twitter.com/i/broadcasts/1lPKqXVlDpMxb

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %