0 0
Read Time:2 Minute, 4 Second

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இயங்கி வரும் தர்மம் செய்வோம் குழுமம் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பரங்கிப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கும் , ஆதரவற்றவர்களுக்கும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குழுமத்தின் தலைவர் தமிமுன் அன்சாரி , ஒருங்கிணைப்பாளர் ஹாஜி அலி, ஆலோசகர் நட்ராஜ் மற்றும் 10 களப்பணியாளர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

குறிப்பாக ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு வழங்குதல், எளியோருக்கு அரிசி & மளிகை பொருட்கள் வழங்குதல், இலவச ஆடையகம், ஊர் முழுவதும் குடிநீர் அடி பம்ப் அமைத்தல், கால்நடைகளுக்கு நீர்த்தொட்டி இப்படி இன்னும் பத்துக்கு மேற்பட்ட பல நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது, அதில் ஒன்றே இந்த கொரொனா ஊரடங்கு கால அன்பு சுவர் திட்டம், இந்தத் திட்டத்தின் கீழ் இன்று முதல் தினமும் மதிய வேளையில் யாசகம் கேட்கும் வழிப்போக்கர்கள், ஏழைகள் , ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவு மற்றும் குடிநீர், பழங்கள் முதலியவை வைக்கப்பட்டு, தேவை உள்ளவர்கள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து ஊரடங்கு காலம் முடியும் வரை இந்த திட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நேற்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் சுமார் 100 நபர்களுக்கு சாப்பாடு, பழம், பிரட் தண்ணீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %