0
0
Read Time:54 Second
மயிலாடுதுறை அருகே குக்கர் மூலம் வீட்டில் சாராய காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்தனர். குத்தாலம் அருகே உள்ள வில்லியநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சாராய வாசனை வருவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு புகார் அளித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தபோது 2 குக்கர்களில் சாராயம் காச்சியது தயாரித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பாபு என்பவரை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்த 200 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர்.
நிருபர்: யுவராஜ், மயிலை.