மயிலாடுதுறை நகரில் அன்பகம் குழந்தைகள் இல்லம் என்ற மாற்றுத்திறனாளிகளுக்காக கல்வி நிலையம் சிறப்பாக இயங்கி வருகிறது இங்கு மனநலம் குன்றியவர்கள் காது கேளாதவர்கள் ஊனமுற்றவர்கள் பலர் இங்கு தங்கி கல்வி பயின்று வருகின்றனர் இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது இதை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆய்வு செய்து கல்வி பயிலும் மாணவர்களின் நலன் பாதுகாப்பு மாணவர்களின் மேம்பாடு நோய் தொற்று காலங்களில் கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கல்வி நிர்வாகத்திடம் கேட்டறிந்தார் அப்பொழுது ஓரு சிறப்பு நிகழ்வாக லட்சுமி என்ற மாணவி வரைந்த ஓவியம் புத்தகத்தை பார்த்த சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை மாணவிக்கு தெரிவித்தார் இதில் 18 வயது மேல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் அன்பகம் கல்வி நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்
நிருபர்: H. ஜமால், மயிலாடுதுறை.