Read Time:45 Second
மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி நீர் திறக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.13 அடியாக உள்ளது. மேலும், மேட்டூர் அணை திறக்கப்படுவதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.