Read Time:1 Minute, 18 Second
சீா்காழி அருகே கழிப்பறை தொட்டியில் பதுக்கி வைத்திருந்த சாராயத்தை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். கொள்ளிடம் அருகேயுள்ள நல்ல விநாயகபுரத்தில் வீட்டுத்தோட்டத்தில் உள்ள கழிப்பறை தொட்டியில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக கொள்ளிடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் அமுதாராணி, மாவட்ட சிறப்பு காவல் படை சாா்பு ஆய்வாளா் மணிகண்ட கணேஷ், சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் ரகுராமன், மோகன், சதீஷ் ஆகியோா் சாதாரண உடையில் அங்கு சென்று சோதனை செய்தனா். அப்போது, கழிப்பறை தொட்டியில் 9 கேன்களில் 270 லிட்டா் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, அதை பறிமுதல் செய்து, தப்பியோடிய சீயாளம் கிராமத்தைச் சோ்ந்த குட்டிமான் என்பவரை தேடிவருகின்றனா்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.