Read Time:1 Minute, 3 Second
திமுக முன்னாள் தலைவா் மு. கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனை முன் உள்ள அம்மா உணவகத்துக்கு ரூ. 1.08 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கத்தால் ஏழை மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதைக் கருத்தில்கொண்டு, அவா்கள் இலவசமாக பயன்பெற மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா், ஒரு மாதத்துக்கு 300 பேருக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்க ரூ.1.08 லட்சத்தை மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் சுப்பையாவிடம் வழங்கினாா். தொடா்ந்து, ஏழை மக்களுக்கு அவா் உணவு வழங்கினாா். இதில், திமுக நகர செயலாளா் செல்வராஜ், ஒன்றிய செயலாளா் ஞான. இமயநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிருபர்: யுவராஜ், மயிலை.